iconஜாதகம் கணித்து எழுதுதல்

" பாரம்பரிய முறைப்படி பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவற்றின் அடிப்படையில் கிரஹ நிலைகளைக் கணித்து எழுதுதல் என்பதே ஜாதகம் எழுதுதல் ஆகும். ஜாதகம் என்பது நாம் பிறந்தபோது இருந்த கிரஹ நிலைகளை ஆராய்ந்து, லக்னம் குறித்து தசாபுக்தி கணக்கிட்டு பலனறிதலாகும். ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் கழித்த பின் ஜாதகம் எழுத வேண்டும். பொதுவாக ஒரு குழந்தைக்கு 12 வயது வரை ஜாதகம் பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது. அதாவது முதல் நான்கு வருடம் தகப்பனின் கர்மாவும், அடுத்த நான்கு வருடங்கள் தாயின் கர்மாவும், அடுத்த நான்கு வருடங்கள் அந்த குழந்தையின் பூர்வ ஜென்ம கர்மாவும் வழி நடத்தும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. எனினும் தற்காலத்தில் குழந்தையின் உடல் நலம் மற்றும் தோஷங்கள் காண ஜாதகம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது."

icon

✶ புதிய ஜாதகம் எழுத குழந்தையின் பெயர், தகப்பனார் பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவை மிக அவசியமாகும்.

✶ நம் ஜோதிட ஆய்வு மையத்தில் டிகிரி சுத்தமாக, சிறப்பான முறையில் ஜாதகம் கணித்துத் தரப்படும்.

icon

✶ வாக்கியம் மற்றும் திருக்கணிதம் எனும் இரு வழிகளில் ஜாதகம் கணிக்கும் முறைகள் இருந்தாலும் இங்கு திருக்கணித முறையில் மட்டுமே ஜாதகம் கணித்து தரப்படும்.

about
about
about
about

எழுதும் முறை மற்றும் மொழி:

iconஎழுதும் முறை

1. புத்தகத்தில் கைகளினால் எழுதப்படும்.
2. கம்பியூட்டரின் உதவியுடன் அச்சடித்து தரப்படும்
3. மின் புத்தகம்

iconமொழி

★ தமிழ், ஆங்கிலம், தெலுகு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் ஜாதகம் கணித்து தரப்படும்.

★ இங்கு எழுதப்படும் ஜாதகமானது பல்வேறு கணித முறையில் மிக துல்லியமாக ஆய்வு செய்து தரப்படும். எனவே கிரஹ நிலைகள் மிகச் சரியாக இருக்கும்.