From the ancient days, before doing any auspicious things good time has to be seen and it has become a part of human’s life.
Every day is a mix of good time and bad time. A day full of good time cannot be available even for devas. So it is always better to see and analyze a day full of more good time and less bad time for doing auspicious things.
For all auspicious functions like Marriage, Shanthi Muhurtham, House warming ceremony, Upnayanum, Bhoomi pooja, Seematham, for doing Mangalayam, purchasing new vehicle, Education, Dosha Pariharam, Child birth by operation based on birth chart of parents auspicious day and time will be calculated accurately. For all functions, good as well as lucky time will be calculated and given accurately.
“பண்டைய காலம் முதலாகவே சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரம் கணிப்பது என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்து வருகிறது.”
✶ ஒவ்வொரு நாளும் நற்குணங்களும், தோஷங்களும் கலந்ததாகவே இருக்கும். நற்குணங்கள் மட்டிலுமே உள்ள நாள் தேவர்களுக்குமே கிடைப்பது அரிது. எனவே நன்கு பார்த்து ஆராய்ந்து, நற்குணங்கள் அதிகமாகவும், தோஷங்கள் குறைந்தும் உள்ள நாளையே சுப காரியங்கள் செய்வதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
✶ திருமணம், சாந்தி முஹூர்த்தம், புதுவீடு குடிபுகுதல், உபநயனம், பூமி பூஜை,சீமந்தம், மாங்கல்யம் செய்தல், புது வண்டி வாங்க, வித்யாரம்பம், தொழில் தொடங்குதல், காது குத்துதல், கடன் வாங்குதல், கடன் தீர்த்தல், கணபதி ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்தல், தோஷ பரிஹாரம் செய்தல், ஆபரேஷன் செய்து குழந்தை பெறுதல் போன்ற விஷயங்களுக்கு ஜாதக ரீதியாக சுப நாட்கள் குறித்து தரப்படும்.
அனைத்து விஷேசங்களுக்கும் நல்ல நாள் மற்றும் யோகமான நேரம் கணித்து தரப்படும்.